/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பதி ஓட்டலுக்கு இரவில் வந்த குண்டு மிரட்டல்! | jaffer Sadiq | Hotels Bomb Threat | Tirupati
திருப்பதி ஓட்டலுக்கு இரவில் வந்த குண்டு மிரட்டல்! | jaffer Sadiq | Hotels Bomb Threat | Tirupati
நேற்று இரவு 11 மணி அளவில் திருப்பதியில் உள்ள 4 ஓட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. லீலாமஹால் அருகே உள்ள மூன்று தனியார் ஓட்டல்களுக்கும், ராமானுஜ சந்திப்பு அருகே உள்ள மற்றொரு ஓட்டலுக்கும் மிரட்டல் வந்தது. ஓட்டல் நிர்வாகத்தின் புகாரில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். சோதனை முடிவில் குண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. தகவல் புரளி என்பது தெரிந்தது. மிரட்டல் வந்த மெயில் முகவரியை கைப்பற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
அக் 25, 2024