14 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் அதிரடி | jagan mohan| andhra former cm| DCBL| ED
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனுக்கு சொந்தமான 27.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. கார்மெல் ஆசியா ஹோல்டிங்ஸ், சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், ஹர்ஷா ஆகிய 3 நிறுவனங்களில் இருக்கும் ஜெகனின் பங்குகள் இவை. அதே போல், DCBL எனப்படும் டால்மியா சிமென்ட்ஸ் பாரத் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 377.2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 793 கோடி ரூபாய் என்று DCBL நிறுவனம் தெரிவித்துள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டிக்கு தொடர்புடைய ரகுராம் சிமென்ட்ஸ் நிறுவனத்தில் DCBL நிறுவனம் 95 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு பிரதி உபகாரணமாக, ஜெகன் மோகன் தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, கடப்பா மாவட்டத்தில் 407 ஹெக்டேர் நிலத்தில் சுங்கம் அமைப்பதற்காக DCBL நிறுவனத்திற்கு குத்தகை உரிமம் பெற்றுத்தந்ததாக கூறப்படுகிறது.