தன்கர் ராஜினாமாவில் சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள் Jagdeep Dhankhar|vice president|rajya sabha
ணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். உடல்நிலையை காரணம் காட்டி பதவியில் இருந்து விலகி இருக்கிறார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. தன்கரின் ராஜினாமா பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் துணை ஜனாதிபதி உட்பட பல்வேறு பதவிகளில் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பை ஜக்தீப் தன்கர் பெற்று இருந்தார். அவர் நல்ல ஆரோக்யத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளில் ராஜ்யசபாவை நடத்திய தன்கர் திடீரென இரவில் ராஜினாமா செய்தது எம்பிக்களிடையே பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தன்கர் பதவி விலகியது தொடர்பாக எதிர்கட்சியினர் பல சந்தேகங்களை கிளப்பி வருகின்றனர். சமீபத்தில், ஜக்தீப் தன்கர் இதயம் தொடர்பான சிகிச்சை பெற்று இருந்தாலும், நேற்று மாலை வரை அவர் நன்றாகத்தான் எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட உடல்நிலை பற்றியோ, ராஜினாமா பற்றியோ அவர் பேசவில்லை. எதிர்கால கூட்டங்கள், பணிகள் பற்றி தான் பேசினார். உடல்நிலைதான் காரணம் என்றால், கூட்டத்தொடருக்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்து இருக்கலாமே? தன்கர் பதவி விலகியதற்கு பின்னால் ஏதோ ஒரு அரசியல் அழுத்தம் இருக்கிறது என எதிர்கட்சி எம்பிக்கள் கூறுகின்றனர். நீதிபதி யஷ்வந்த் பதவி நீக்க தீர்மானம் தொடர்பான விவகாரம்தான் தன்கர் பதவி விலக காரணம் என கூறப்படுகிறது.