இந்தியாவை அதிரவைத்த பயங்கரவாதி ரஹ்மானி வீடியோ | Jasimuddin Rahmani video | Rahmani to Mamata video
மேற்கு வங்கத்தை தனி நாடாக அறிவித்து, மோடியின் ஆட்சியில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, வங்கதேச பயங்கரவாதி கோரிக்கை விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில் ராணுவம் நிறுவிய, நோபல் பரிசு வென்றுள்ள பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான தற்காலிக அரசு அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து சிறையில் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இயங்கி வரும் அல்-குவைதா ஆதரவு ஏபிடி எனப்படும் அன்சாருல்லா பங்களா டீம் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜஷீமுதீன் ரஹ்மானியும் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியியாகி இந்தியாவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அந்த வீடியோவில் ரஹ்மானி கூறி இருப்பதாவது: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து, அடைக்கலம் கொடுத்துள்ளது; இதை ஏற்க முடியாது. வங்கதேசத்தில் பிரச்னையை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது. வங்கதேசம் ஒன்றும், சிக்கிமோ, பூட்டானோ அல்ல. இது 18 கோடி முஸ்லிம்கள் உள்ள நாடு. சீனா உதவியுடன், இந்தியாவின் கழுத்து போல் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களை துண்டிப்போம்.