உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயா பச்சன் | Jaya bachchan M.P | Fight with jagadeep dhankar | Raj

தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஜெயா பச்சன் | Jaya bachchan M.P | Fight with jagadeep dhankar | Raj

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22 முதல் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய மறுதினமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பார்லிமென்ட்டின் இரு அவைகளிலும் நடக்கிறது. ராஜ்யசபாவில் இன்று சமாஜ்வாதி எம்பியும் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் பேச அனுமதி கேட்டார். அவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர், அவரை பேச அழைத்தார். அப்போது அவர் கூறிய வார்த்தை ஜெய பச்சனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது ஜெயா பச்சனை பார்த்து சக நடிகரான அமிதாப் பச்சனை திருமணம் செய்தவர் என்பதை குறிப்பிடும் வகையில் ‛ஜெயா அமிதாப் பச்சன் என கூறி பேச அழைத்தார். அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் கணவன் மனைவி தான் என்றாலும் கூட தனக்கு கணவரை வைத்து அடையாளம் காட்ட வேண்டாம் என அவர் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் மீண்டும் 2வது முறையாக ஜெகதீப் தன்கர் இப்படி கூறியதால் ஜெயா பச்சன் கடும் கோபமடைந்து அவரிடம் சண்டைக்கு போனார்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி