உறவை உடைத்து விட்டார் டிரம்ப்: அமெரிக்க பொருளாதார நிபுணர் தாக்கு Jeffrey Sachs slams Trump| US pres
இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு, இதுவரை வெளியுறவு கொள்கையில் இல்லாத முட்டாள் தனமான நடவடிக்கை என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் Jeffrey Sachs தெரிவித்தார். அபராத வரி விதிப்பின் விளைவாக, அமெரிக்கா- இந்தியா இடையேயான பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட ராஜாங்க உறவுகள் மோசம் அடைந்துள்ளது. இனிமேல் அமெரிக்காவை நம்பவே முடியாது என்ற மனநிலைக்கு இந்தியர்கள் வந்திருப்பார்கள். இந்தியாவுடன் வளர்க்கப்பட்ட ராஜங்க உறவுகளை ஒரே இரவில் அதிபர் டிரம்ப் முடித்து கட்டிவிட்டார். 25 சதவீத அபராத வரி நீக்கப்பட்டாலும் கூட, இந்தியர்களுக்கு அமெரிக்கா மீது நம்பிக்கை வராது என்றே நினைக்கிறேன் என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி கூறினார். வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் உள்ள இந்தியாவுக்கு, அமெரிக்க அபராத வரி விதித்ததன் மூலம், அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளிடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒருங்கிணைப்பு ஏற்பட அதிபர் டிரம்ப் காரணமாக இருந்துள்ளார். தாங்கள் நினைக்கும் மேம்பட்ட உறவு அமெரிக்காவுடன் கிடைக்காது என்பதை இந்தியர்கள் புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் கூறினார்.