/ தினமலர் டிவி
/ பொது
/ சூடு பிடித்தது ஜார்க்கண்ட் தேர்தல் களம் Jharkhand election | NDA| INDIA alliance| Congress| JMM| BJP
சூடு பிடித்தது ஜார்க்கண்ட் தேர்தல் களம் Jharkhand election | NDA| INDIA alliance| Congress| JMM| BJP
ஜார்க்கண்டில் அடுத்த மாதம் 13 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டமாக 43 தொகுதிகள் 2ம் கட்டமாக 38 தொகுதிள் என மொத்தம் 81 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை 23ம் தேதி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியில் ஏஜேஎஸ்யு எனப்படும் ஜார்க்கண்ட் மாணவர் பேரவை கட்சி, ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜ தலைமையிலான கூட்டணியில் இன்று தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. பாஜ - 68 இடங்களிலும், ஏஜேஎஸ்யு - 10, ஜேடியு - 2 மற்றும் எல்ஜேபி - 1 தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது.
அக் 18, 2024