வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சரியாக செல்லுறிங்க ஜயா
சரியான கருத்து
தற்குறி
Super sir valtkal
அது முகம் பார்க்கும் கண்ணாடி-மொமெண்ட்
நீதிபதி சொன்னால் அது மிகச்சரியாக இருக்கும்
தமிழகத்தில் பல தற்குறிகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு
அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா். முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா்கள் பொன்முடி, வளா்மதிக்கு எதிரான வழக்குகளையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள Sunbeam சன்பீம் பள்ளி ஆண்டு விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கலந்து கொண்டார். சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டிய அவர் பேசுகையில், மாணவ, மாணவிகள் அவசியம் புத்தகம் படிக்க வேண்டும் என அறிவுரை கூறினார். வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வரும் தகவல்களை நம்பாமல் உண்மைகளை படித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றார். தமிழகத்தில் பல தற்குறிகள் சுற்றிக்கொண்டிருப்பதாக அவர் கூறியதும் மாணவ, மாணவிகளின் கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. இது ஒரு பொன்மாலை பொழுது என்ற சினிமா பாடலை முழுவதுமாக பாடி மாணவ, மாணவிகளின் கைதட்டல்களை பெற்றார். #JusticeNAnandVenkatesh #MadrasHighCourt #VelloreEvents #SunbeamInternationalSchool #ICSE #SchoolFunction #EducationMatters #LegalEducation #Judiciary #InspiringYouth #CommunityEngagement #VelloreSchools #SchoolCelebration #JusticeInEducation #FutureLeaders #EmpoweringStudents #VelloreCommunity #SchoolEvents
சரியாக செல்லுறிங்க ஜயா
சரியான கருத்து
தற்குறி
Super sir valtkal
அது முகம் பார்க்கும் கண்ணாடி-மொமெண்ட்
நீதிபதி சொன்னால் அது மிகச்சரியாக இருக்கும்