கனடா அரசியலை புரட்டிப்போடும் சம்பவம் | canada | Justin Trudeau | Justin Trudeau Resign
கனடாவில் கடந்த 2023ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்றுள்ள அவரது கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டி இருந்தார். அப்போது தொடங்கி இந்தியா-கனடா உறவில் தொடர்ந்து விரிசல் நீடிக்கிறது. இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக கனடா பத்திரிக்கைகள் செய்தி வெளியிட ஆரம்பித்தன. ஆதாரமின்றி கனடா பத்திரிகைகள் வெளியிட்ட செய்தி குறித்து ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது உளவுத்துறையில் உள்ள சில கிரிமினல்களின் வேலை அது என கேசுவலாக பதில் சொன்னார். அரசின் மிக ரகசியமான விஷயம் என்ற பெயரில் பத்திரிகைகளுக்கு கிரிமினல்கள் தரும் செய்திகள் தவறாக வந்துள்ளது. இதில் ஏதேனும் சதி இருக்கலாம். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கனடா மக்களை பாதுகாப்பது தான் என் முதன்மை பணி. அதை செய்து வருகிறேன் என ட்ரூடோ பேசி இருந்தார். தொடர்ந்து அவரது செயல்பாடு கனடாவுக்கு உள்ளேயும் விமர்சனத்துக்கு ஆளானது. அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவு தர மறுத்தது. இதனால் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. ஏற்கெனவே சர்வதேச நெருக்கடிகளை ட்ரூடோ சந்தித்து வரும் நிலையில் உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வி அடைந்துவிட்டார்.