உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் திடீர் சலசலப்பு | Kailashnathan | Governor | Graduation | Nati

கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் திடீர் சலசலப்பு | Kailashnathan | Governor | Graduation | Nati

புதுச்சேரி அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 11வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் மாணவர்களுக்கு பதக்கம், பட்டம் வழங்கி பாராட்டினார். கவர்னர் பங்கேற்ற விழாவின் துவக்கத்தில் முதலில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. கவர்னர் அருகில் நின்றிருந்த கல்லூரி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்தினர். பின்னர் முதலில் தேசிய கீதம் பாடப்பட்டு அதன் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !