எம்பியாகும் கமல்ஹாசன் முதல்முறையாக டென்ஷன்! kamalhassan| MNM | rajyasabhamp
ராஜ்ய சபா எம்பியாக போட்டியின்றி தேர்வான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் வாளை கொண்டு வந்தார். அவர் அந்த வாளை கொடுக்க முயன்றபோது, அதை வாங்க கமல் மறுத்தார். மறுபடியும் ரசிகர் வாளை கொடுக்க முயன்றதால் கமல் டென்ஷன் ஆனார். அதை கீழ வைங்க என கோபமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
ஜூன் 14, 2025