உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு ஊரே திரண்டு கன்டக்டரை வெளுத்த பின்னணி | Kanniyakumari | Bus Conductor

ஒரு ஊரே திரண்டு கன்டக்டரை வெளுத்த பின்னணி | Kanniyakumari | Bus Conductor

கன்னியாகுமரி உண்ணாமலைக்கடையை சேர்ந்தவர் சசி, வயது 54. அரசு பஸ் கண்டக்டர். நாகர்கோவில்-சிறமடம் வழித்தடத்தில் செல்லும் பஸ்சில் பணியாற்றி வருகிறார். புதனன்று காலை பஸ் நாகர்கோவில் நோக்கி வந்த போது ஞானையாபுரம் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகள் ஏறினர். அப்போது பிளஸ் 2 மாணவியை கண்டக்டர் சசி அத்துமீறி தொட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். பள்ளிக்கு போகாமல் நேராக வீட்டுக்கு கிளம்பி சென்று தனக்கு நடந்த துயரத்தை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். மாணவியின் பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பஸ் ஞானையாபுரம் வந்த போது சிறைபிடித்தனர். கண்டக்டர் சசியையும் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். நாகர்கோவில் மகளிர் போலீசார் கண்டக்டர் சசி மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

நவ 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ