மீண்டும் ஒரு கூட்டநெரிசல் நடந்தது என்ன? பரபரப்பு தகவல் Karnataka stampede 13 women, children Fainted
கர்நாடக மாநிலம், தட்சண கன்னடாவில் புத்தூர் தொகுதி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் குமார் ராய், தீபாவளியை முன்னிட்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தீபாவளிக்கு பெண்களுக்கு இலவசமாக சேலை மற்றும் பாத்திரங்கள் பரிசளிக்கப்படும் என அறிவித்திருந்தார். புத்தூர் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள மைதானத்தில் விழா நடந்தது. விழாவில் முதல்வர் சித்தராமய்யா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் ஒரு மணிநேரம் காலதாமதமாக வந்தார். அவரை காணவும் இலவச சேலை மற்றும் பாத்திரங்களை வாங்கவும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அந்த மைதானத்தில் கூடியிருந்தனர். அந்த மைதானத்தில் 20 ஆயிரம்பேர்தான் இருக்க முடியும். குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகளும் செய்யப்படவில்லை. 6 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்த விழா முடிந்து மக்கள் கிளம்பும்போது, திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் என 13 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 3 பெண்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு ஏதுமில்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. ஏற்கனவே பெங்களூருவில் ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் கர்நாடகாவை உலுக்கியது. அந்த சம்பவம் காங்கிரஸ் அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியது. முதல்வர் சித்தராமையாவுக்கும் துணை முதல்வர் சிவகுமாருக்கும் விளம்பரத்தில் தான் ஆர்வம்; மக்கள் பாதுகாப்பில் இல்லை என பா ஜ உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிய நிலையில் இப்போது மீண்டும் சித்தராமையா பங்கேற்ற தீபாவளி விழாவில் நெரிசல் ஏற்பட்டு 13 பெண்கள் மயக்கமடைந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. #KarnatakaStampede #PutturDiwali #WomenAndChildren #DehydrationAwareness #CMsiddaramaiah #AshokRai #JanaMana2025 #CongressGovernment #PublicSafety #FestivalSafety #KarnatakaNews #DiwaliCelebration #EmergencyResponse #HealthAwareness #CommunitySupport #TragicEvent #LocalNews #PutturEvents #SafetyFirst #KarnatakaPolitics