/ தினமலர் டிவி
/ பொது
/ ராணுவ வீரர்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர் வெற்றி' ராக்கி Karur Barani Park Schools|Jute Rope |Indian Mil
ராணுவ வீரர்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர் வெற்றி' ராக்கி Karur Barani Park Schools|Jute Rope |Indian Mil
ஆகஸ்ட் 9ம் தேதி ரக் ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கரூர் பரணி பார்க் பள்ளிகள் குழுமத்தை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் ராணுவ வீரர்களுக்கு தங்களது அன்பு, நன்றியை வெளிப்படுத்தும் வகையில் 3 லட்சம் ராக்கி கயிறுகளை தயார் செய்து அனுப்பினர். கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை இப்பள்ளி மாணவர்கள் அனுப்புகின்றனர். 9வது ஆண்டாக இந்தாண்டு, அலங்கார ராக்கி, திருக்குறள், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி குறிக்கும் ராக்கிகளை தயாரித்து டெல்லி ராணுவ தலைமையகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
ஜூலை 19, 2025