உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் சம்பவத்தில் சதியா? துப்பு துலக்குகிறது சிபிஐ | CBI | Karur CBI Investigation | Karur Stampede

கரூர் சம்பவத்தில் சதியா? துப்பு துலக்குகிறது சிபிஐ | CBI | Karur CBI Investigation | Karur Stampede

தவெக தலைவரும் நடிகருமான விஜய், செப்டம்பரில் கரூரில் நடத்திய பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும். அதை முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு கண்காணிக்கும். விசாரணையை ஒருங்கிணைக்க ஒரு சீனியர் அதிகாரியை தமிழக அரசு நியமிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சிபிஐ அதிகாரிகள் இப்போது சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசாரத்துக்கு வரும் முன், சம்பவ இடம் எப்படி இருந்தது? அவர் வந்த போது எப்படி இருந்தது என போட்டோ மற்றும் வீடியோக்களை வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். ஏதோ தவறு நடந்துள்ளது, எதுவோ சரியில்லை. விஜய்க்கு எதிராக சதி நடந்துள்ளதா? என அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனராம். குறிப்பாக விஜய் பிரசார வேன் வரும் இடத்தில் ஒரு பள்ளம் உள்ளது. அது வேண்டுமென்றே தோண்டப்பட்டுள்ளதாக தெரிகிறது என நீதிபதி அஜய் ரஸ்தோகி குழுவிடம் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனராம். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என்கின்றனர் அதிகாரிகள். இது தவிர இன்னொரு விஷயமும் சொல்லப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் தமிழக அரசு சிபிஐக்கும், தமிழக அரசுக்கும் ஒருங்கிணைக்கும் அதிகாரியை இதுவரை நியமிக்கவில்லை. விரைவில் நியமிக்கும்படி தமிழக தலைமை செயலருக்கு நீதிபதி ரஸ்தோகி கடிதம் எழுதியுள்ளார். அடுத்தாண்டு ஏப்ரலில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கரூர் விவகாரத்தில் சிபிஐயின் இறுதி கட்ட அறிக்கை ஜன., அல்லது பிப்., யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. #CBI | #Karur | #CBIInvestigation | #KarurStampede | #Vijay | #VijayCampaign

நவ 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை