உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணித்த வருவாய் அதிகாரிகள்! | Ungaludan Stalin camp | DMK | CMStalin |
ஜூலை 15ல் முதல்வர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவக்கி வைத்தார். அக்டோபர் வரை 10 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஜாதி சான்று, பட்டா பெயர் மாற்றம், புதிய பட்டா, பென்ஷன், மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு விண்ணப்பம், ஆதார் மற்றும் ரேஷன் கார்டில் திருத்தம் கேட்டு மக்கள் முகாமுக்கு வருகின்றனர். பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் கோரியும் தான் அதிக அளவில் மனுக்கள் வருகின்றன. இந்த சூழலில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பான பெரா, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உங்களுடன் ஸ்டாலின் முகாமை இன்று முதல் புறக்கணிக்க போவதாக அறிவித்து இருந்தது. பெறப்படும் மனுக்களை பரிசீலிக்க கால அவகாசம் வழங்க வேண்டுமென்பது அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதேநேரம் மற்றொரு அமைப்பான பெட்ரா அரசுக்கு ஆதரவாக முகாமில் பங்கேற்பதாக அறிவித்தது. இந்த சூழலில் கரூர் தான்தோன்றி மலை தனியார் மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடந்தது . குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற தயாராக இருந்தனர். ஆனால் பெரிதளவில் மக்கள் கூட்டம் வரவில்லை. மக்கள் யாரும் வராததால் காலி இருக்கைகளாக முகாம் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார். முகாமில் வருவாய்த்துறை சார்பில் எந்த ஒரு முகாம்களும் அமைக்கப்படவில்லை, இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வருவாய் அதிகாரிகள் முகாமை புறக்கணித்து இருந்தனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு கரூரில் மக்கள் ஆதரவு இல்லாதது பேசுபொருளாகி உள்ளது. #UngaludanStalincamp | #DMK | #CMStalin | #Karur | #Revenueofficials | #boycottStalincamp