உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் அருகே பயங்கர விபத்து: உருக்குலைந்த வேன்: 4 பேர் மரணம் 4 dies accident omni bus van tractor kar

கரூர் அருகே பயங்கர விபத்து: உருக்குலைந்த வேன்: 4 பேர் மரணம் 4 dies accident omni bus van tractor kar

பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு ஆம்னி பஸ் இன்று அதிகாலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்தது. கரூர் அருகேயுள்ள செம்மடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. இதனால், முன்னால் சென்ற டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதியது. இதில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. டிராக்டரில் மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய ஆம்னி பஸ் சென்டர் மீடியனில் ஏறி, மறுபுறம் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இரண்டு வாகனங்களும் அதிவேகத்தில் வந்து மோதிய காரணத்தால் வேன் முற்றிலும் உருக்குலைந்து போனது. ஆம்னி பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. பயங்கர சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருடன் சேர்ந்து காயமடைந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில்,வேன் டிரைவர், 2 சிறுவர்கள், இன்னொரு ஆண் ஆகியோர் இறந்தனர். பஸ் மற்றும் வேனில் இருந்த 30க்கும்மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வாகனத்தில் 20 பேர் இருந்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் ஏற்காடுக்கு சுற்றுலா செல்லும்போது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மே 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !