உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூர் சம்பவத்தில் உண்மையை கண்டறிய SIT விசாரணை துவக்கம் karur Incident| IG Asra Garg| Investigation

கரூர் சம்பவத்தில் உண்மையை கண்டறிய SIT விசாரணை துவக்கம் karur Incident| IG Asra Garg| Investigation

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் தமிழக அரசு அமைத்த ஒருநபர் ஆணையம் விசாரித்து வருகிறது. இச்சூழலில் கட்சிகள் ரோடு ஷோ நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சென்னை ஐகோர்ட், கரூர் சம்பவம் பற்றி விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் SIT எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது. ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழு இன்று விசாரணையை தொடங்கியது. கரூர் வேலுசாமிபுரத்தில் நெரிசல் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.

அக் 05, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
அக் 05, 2025 18:24

ஒரே நிகழ்வினை பல பேர் ஒரே நேரத்தில் விசாரணை செய்தால் அது செத்துப் போகும். SIT விசாரணை பலன் தர இன்னமும் நம்புவோம் ஒரு நபர் விசாரணை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஊடக, செய்தியாளர்கள் மற்றும் கட்சிகளின் விசாரணை குழு அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். ஏற்கனவே பிரேதப் பரிசோதனை உட்பட பல சாட்சியங்கள் அழிந்து போயிருக்க/குழம்பிப் போயிருக்க வாய்ப்புண்டு. தமிழக அரசு தடுமாறுகிறது. சிறையிருந்தே ஆட்சி செய்த செல்வரின் கோட்டை என்பதால், அங்கே இளமை வேகத்தில் "மாஸ்" காட்டிய காரணத்தால், இது எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல என்பதில் சந்தேகமில்லை


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை