/ தினமலர் டிவி
/ பொது
/ மாநிலத்தை உலுக்கிய வழக்கில் கேரள கோர்ட் தீர்ப்பு | Kerala Court verdict | Sharon Raj case
மாநிலத்தை உலுக்கிய வழக்கில் கேரள கோர்ட் தீர்ப்பு | Kerala Court verdict | Sharon Raj case
திருவனந்தபுரம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் ராஜ் வயது 23. களியக்காவிளையை சேர்ந்த 22 வயது கிரீஷ்மாவை காதலித்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிரீஷ்மாவின் பெற்றோர் ராணுவ மாப்பிள்ளையை நிச்சயம் செய்தனர். கிரீஷ்மாவும் சம்மதித்தார். ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க, அவரை கொலை செய்ய கிரீஷ்மா முடிவு எடுத்தார். வலி நிவாரண மாத்திரைகளை பலமுறை குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை. 2022 அக்டோபர் 14 அன்று ஷாரோனை வீட்டுக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என கொடுத்தார். உடல் நலம் மோசமாகி மருத்துவமனையில் அட்மிட் ஆன ஷாரோன் சில நாட்களில் இறந்தார்.
ஜன 20, 2025