800 கிலோ எடையில் பிரமாண்டமான 'கிங்காங்' சாக்லெட் சிலை | King kong chocolate statue | 7 Feet statue
7 அடியில் பிரமாண்ட சாக்லெட் கிங் காங்! களைகட்டும் கிறிஸ்துமஸ் புதுச்சேரி மிஷன் வீதியில் அமைந்துள்ளது சூக்கா சாக்லெட் ஷோரூம். இங்கு புகழ்பெற்ற தலைவர்களின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அவர்களை சாக்லெட் சிலையாக வடிவமைத்து காட்சிப்படுத்தி வருகின்றனர். இதுவரை வைக்கப்பட்ட பாரதியார், அப்துல் கலாம், டெண்டுல்கர், தோனி, விமானப்படை பைலட் அபிநந்தன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உட்பட பலரது சாக்லெட் உருவ சிலைகள் அனைவரையும் கவர்ந்தது. அந்த வரிசையில் இப்போது கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 800 கிலோ எடை சாக்லேட்டில் 7.2 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கிங்காங் சிலையை உருவாக்கி காட்சிக்கு வைத்துள்ளனர். இங்கு வரும் வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் கிங்காங் சிலையுடன் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர்.