உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பட்டீஸ்வரர் கோயில் ஆகம விதிமீறலில் அடுத்த அதிர்ச்சி | kovai patteeswaran temple video | hindu issue

பட்டீஸ்வரர் கோயில் ஆகம விதிமீறலில் அடுத்த அதிர்ச்சி | kovai patteeswaran temple video | hindu issue

மிகவும் தொன்மையான கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நடந்த ஆகம விதிமீறல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கை கேலிக்கூத்தாகி விட்டது. அதாவது, சில நாட்களுக்கு முன்பு இரவில் கோயில் பூஜை முடிந்து கருவறையை மூடி நடை சாத்தினர். அதற்கு பிறகு டிப்டாப்பாக வந்த ஒருவருக்காக கோயில் கதவுகள் திறக்கப்பட்டன. பூட்டிய கருவறையையும் அவருக்காக திறந்தனர். அவரும் சாதாரணமாக கருவரை வரை சென்று சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தார். இது அப்பட்டமான ஆகம விதிமீறலாகும். இந்த சம்பவம் நடந்த போது கோயிலுக்கு வழக்கமாக வரும் பக்தர் ஒருவர் கொதித்துப்போனார். நடந்ததை அப்படியே செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். எப்படி கோயில் ஆகம விதியை மீறி நடை சாத்திய பிறகு ஒருத்தரை உள்ளே அனுமதிக்கலாம் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். சாமி கும்பிட்ட விஐபியையும் உள்ளே அனுமதித்த கோயில் ஊழியர்களையும் கேள்விகளால் துளைத்தார். இந்த வீடியோ வெளியாகி இந்துக்களை கொந்தளிக்க வைத்தது. கோயில் விவகாரம் விஸ்வரூபம் ஆனநிலையில் மருதமலை கோயில் தக்கார் செந்தில்குமார், பட்டீஸ்வரர் கோயில் உதவியாளர் விமலா ஆகியோரை வைத்து அரசு விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கை அடிப்படையில், முதல்கட்டமாக பட்டீஸ்வரர் கோயில் எலக்ட்ரீசியன் வேல்முருகன், கோயில் அர்ச்சகர் சாமிநாதன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு கோயில் வளாகத்துக்குள் செல்போன் கொண்டு செல்லவும் கோயில் நிர்வாகம் இப்போது தடை விதித்துள்ளது. இது தான் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கோயில் உள்ளே நடந்த ஆகம விதிமீறல் செல்போன் வீடியோவால் தான் வெளியே வந்தது. எனவே இனி உள்ளே நடக்கும் சம்பவம் எதுவும் வெளியே வராமல் இருக்கவே செல்போனுக்கு தடை விதித்து இருப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை