உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தட்டியெடுத்த கனமழை; கோவையில் வெள்ளம் kovai rain| coimbatore flood| bus struck in flood

தட்டியெடுத்த கனமழை; கோவையில் வெள்ளம் kovai rain| coimbatore flood| bus struck in flood

கோவையில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று மாலையும் கனமழை தட்டியெடுத்தது. காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட நகரத்தின் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாய்பாபா காலனி டு சிவானந்தா காலனி செல்லும் வழியில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கியிருந்தது. அந்த வழியாக சென்ற பஸ், பாதியளவிற்கு மூழ்கியது. இன்ஜின் ஆப் ஆகி நின்றுவிட்டது. அதிலிருந்த பயணிகளை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். அதன் பின் பஸ்சை கிரேன் மூலம் மீட்கும் பணி நடந்தது. நேற்றும் இதே இடத்தில் தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது. கனமழை பெய்யும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்தும் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட ஏற்பாடு செய்யததால், 2வது நாளாக மற்றொரு பஸ் சிக்கி உள்ளது. மழைக்காலத்தில் சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கும் என்றாலும் இந்தளவுக்கு அதிகமாக இருந்தது இல்லை. மழை நீருடன் கழிவுநீரும் கலந்தே அதிகளவில் தேங்கியது. சுற்றுவட்டார பகுதிகளில் அடைபட்டுள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாராததால் அங்கிருந்து வெளியேறிய கழிவுநீர் பாலத்தின் அடியில் தேங்கியதே பாதிப்புக்கு காரணம்.

அக் 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை