/ தினமலர் டிவி
/ பொது
/ முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜுக்கு சோக சம்பவம் | Kovai Selvaraj | DMK | EX MLA Kovai Selvaraj
முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜுக்கு சோக சம்பவம் | Kovai Selvaraj | DMK | EX MLA Kovai Selvaraj
முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தி தொடர்பு துணை செயலாளருமான கோவை செல்வராஜ் தனது மகன் திருமண விழாவுக்காக திருப்பதி சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவருக்கு வயது 66 செல்வராஜ், கோவை மேற்கு தொகுதியில் 1991ம் ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பின் அதிமுகவில் இணைந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் திமுகவில் சேர்ந்த அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.
நவ 08, 2024