அதிர வைத்த கிருஷ்ணகிரி வழக்கில் அதிர்ச்சி திருப்பங்கள் | Krishnagiri case | Fake NCC Camps | Sivaram
சிவராமன் இறந்தது எப்படி! நடந்தது என்ன? சிவராமன் தந்தையும் பலி! கிருஷ்ணகிரி கந்திகுப்பம் தனியார் பள்ளியில், இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் போலி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை பர்கூர் போலீசார் கைது செய்தனர். இவர் தவிர ஐந்து பயிற்சியாளர்கள், குற்றத்தை மறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தினர் 4 பேர் உட்பட 11 பேர் கைதாகினர். மேலும் சில தனியார் பள்ளிகளில் இதே போல் சிவராமன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. சிவராமன் கைதான விவரம் அறிந்து மற்றொரு மாணவி அளித்த புகாரில் சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு நேற்று பதிவானது. இதுதவிர 36 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார்கள் குவிந்தன. இந்த சூழலில் அவர் கைதாவதற்கு முன் நடந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது; சிவராமன் தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜூலை 11ல் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். பின் பாலியல் பலாத்கார வழக்கில் தான் கைதாக போகிறோம் என்ற பயத்தில் கைதாவதற்கு ஒரு நாள் முன் மீண்டும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். கைது செய்து அழைத்து வரும்போது தப்பியோட முயன்றதில் அவரது கால் முறிந்தது.