/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை KRS CBSE பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு | Plastic Eradication Awareness Rally
மதுரை KRS CBSE பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு | Plastic Eradication Awareness Rally
மதுரை அருப்புக்கோட்டை ரோடு டி வி ஆர் நகரில் உள்ள கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ. பள்ளி சார்பில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பெருங்குடியில் நடந்தது. 5ம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி முழக்கமிட்டனர். நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜூலை 03, 2024