உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மடத்தின் சொத்துகள் அறநிலைய துறை வசம் | kumbakonam | temple | adheenam | Devotees | Marriage

மடத்தின் சொத்துகள் அறநிலைய துறை வசம் | kumbakonam | temple | adheenam | Devotees | Marriage

திருமணம் செய்த ஆதினம் கொதித்து எழுந்த மக்கள்! மடத்தைவிட்டு வெளியேற்றம் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே சூரியனார் கோயில் ஆதினமாக இருந்தவர் 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள். இவர் கடந்த மாதம், கர்நாடகாவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டார். துறவறத்தில் இருந்து இல்லறத்திற்கு மாறியவர் ஆதினமாக தொடர கூடாது என்று ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கிராமத்தை மக்கள் சிலர் மடத்தில் இருந்து ஆதினத்தை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். மடத்தில் இருந்து எந்த பொருளும் எடுத்து செல்ல அனுமதிக்காமல், ஆதினத்தை வலுக்கட்டாயமாக வெளியேற்றி மடத்தை பூட்டினர். தம்மை ஆதினமாக நியமித்த திருவாவடுதுறை ஆதினத்திற்கும் மகாலிங்கம் சாமிகளுக்கும் மனஸ்தாபங்கள் இருப்பதால், சூரியனார் கோயில் மடத்தின் சொத்துகளை திருவாவடுதுறை ஆதினத்திடம் ஒப்படைக்க அவர் மறுத்துவிட்டார்.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை