உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாபா சித்திக் கதை முடித்த ரவுடி கும்பலை ஒழிப்பதாக ஆதங்கம் | Lawrence bishnoi | Pappu yadav

பாபா சித்திக் கதை முடித்த ரவுடி கும்பலை ஒழிப்பதாக ஆதங்கம் | Lawrence bishnoi | Pappu yadav

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையின் பாந்த்ரா கிழக்கு எம்எல்ஏவாக இருக்கும் அவரது மகன் ஜீஷனின் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கியால் சுட்டதாக ஹரியானாவை சேர்ந்த குர்மயில் பல்ஜித் சிங் வயது 23, உத்தரபிரதேசத்தை சேர்ந்த தர்மராஜ் கஷ்யாப் வயது 19 ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3வது குற்றவாளியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிவ்குமார் கவுதமை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் 4வதாக ஒருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை