உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் சொன்னது என்ன? Madras High Court YouTuber Savukku Shankar goondas ac

சவுக்கு சங்கர் வழக்கில் ஐகோர்ட் சொன்னது என்ன? Madras High Court YouTuber Savukku Shankar goondas ac

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கடந்த மே 4ம் தேதி கைது செய்தனர். இதே விவகாரத்தில் திருச்சி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மொத்தம் 17 போலீஸ் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 12ம்தேதி குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் கமலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வு விசாரித்தது. சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை