அமித்ஷா பக்கம் திரும்பிய ஒட்டுமொத்த பாஜவினர் கவனம் | Madurai | Amit shah visit |Hindu munnani
இந்து முன்னணி அமைப்பு நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் வரும் 22ம் தேதி நடக்க உள்ளது. பா.ஜ, வி.ஹெச்.பி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளும் மாநாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. பா.ஜ நிர்வாகிகள் தங்கள் கிளை, பூத் கமிட்டியில் இருந்து மாநாட்டுக்கு தொண்டர்கள், முருக பக்தர்களை அழைத்துச் செல்ல வாகனம், உணவு ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். இந்த சூழலில் தான் ஞாயிறன்று மதுரையில் நடந்த, பா.ஜ மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி 4 நாட்களுக்கு முன்பு திடீரென அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்தது முதல் தமிழகம் முழுதும் பா.ஜவினர், அமித் ஷா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்த போய்விட்டனர். இதனால், முருக பக்தர்கள் மாநாட்டு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.