ஊரெல்லாம் குப்பை கூளம் ஒருநாள் மட்டும் ஒன்னுமில்லை! | Madurai | CM Stalin | Stalin Madurai Visit
நாளை நடக்க உள்ள திமுக பொதுக் குழு கூட்டத்திற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்துள்ளார். மதுரை ஏர்போர்ட் தொடங்கி மதுரை மாநகராட்சி பகுதிகள் வழியாக அழகர்கோவில் சாலையில் உள்ள தங்கும் விடுதி வரை இன்று ரோட் ஷோ நடத்தவுள்ளார். அவனியாபுரம் தொடங்கி ஆரப்பாளையம் வரை புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஸ்டாலின் செல்லும் பாதை தவிர்த்து அதன் அருகில் உள்ள சாலைகள் முழுதும் பள்ளமாக உள்ளது. இது தவிர குப்பைகளும் கழிவுநீர் கால்வாய்களும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக 15 கிலோமீட்டர் தூரத்திற்கு திரைச்சீலைகளை வைத்து மறைத்துள்ளனர். பந்தல்குடி கால்வாய் பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதியினர் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதை கண்டித்து ஸ்டாலின் வரும்போது போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்த சில நொடிகளில் அவசர அவசரமாக வந்த மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் மட்டும் திரைச்சீலைகளை அகற்றினர்.