உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஒரு சைடே உடைந்து தொங்கிய பஸ் | Madurai | Govt Bus

ஒரு சைடே உடைந்து தொங்கிய பஸ் | Madurai | Govt Bus

ஓட்ட பஸ் ஏன் எடுத்துட்டு வந்தீங்க? கேட்ட பயணியின் கழுத்து நெரிப்பு மதுரை எம்ஜிஆர் பஸ் ஸ்டாண்ட் - விராட்டிபத்து இடையே 12V என்ற டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ்சின் பல பகுதிகள் உடைந்தும், தொங்கி கொண்டும் இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். டிப்போவில் இருந்து பஸ் எடுக்கும் போதே கவனிக்க வேண்டாமா? என கேட்டனர். பயணிகள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்டக்டர் திணறினார். கேள்வி கேட்ட பயணியின் கழுத்தை நெரிக்க சென்றார். சுற்றி இருந்த பயணிகள் இருவரையும் விலக்கி விட்டனர்.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி