சீரான முன்னேற்றத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள்! Madurai Thoppur | AIMS | Medical College
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல் இயக்குநரும், முதன்மை செயல் அதிகாரியுமான பேராசிரியர் ஹனுமந்த ராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது: மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய இருக்கிறது. இதைக் கட்டி முடிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 2019ல் நடந்தது. 2024ம் ஆண்டு மே 22ம் தேதி கட்டுமான பணிகள் துவங்கின. முதல் கட்டமாக கல்வி வளாகம், வெளிநோயாளிகள் மருத்துவப் பிரிவு, மாணவர்கள் தங்கும் விடுதிகள், அத்தியாவசிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக இதுவரை 24 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 2வது கட்டமாக மேற்கொள்ளப்பட இருக்கின்றன. முழு கட்டுமான பணிகளும் 2027ம் ஆண்டு பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலக தரத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.