/ தினமலர் டிவி
/ பொது
/ டிரைவர், கண்டக்டர் கவனக்குறைவால் நடந்த அசம்பாவித சம்பவம்! Conductor | Govt Bus | TNSTC | Madurai
டிரைவர், கண்டக்டர் கவனக்குறைவால் நடந்த அசம்பாவித சம்பவம்! Conductor | Govt Bus | TNSTC | Madurai
மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ராஜா ஓட்டினார். புதுக்கோட்டை விசலூரை சேர்ந்த கண்டக்டர் கருப்பையா, டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். பஸ் மதுரை ஒத்தக்கடை பகுதியில் திருச்சி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இருந்த பேரி கார்ட் இருந்ததால் சற்று நிலை தடுமாறிய டிரைவர் பிரேக் அடித்துள்ளார். அப்போது படிக்கட்டில் நின்று டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த கண்டக்டர் கருப்பையா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். கருப்பையாவுக்கு தலையில் பலத்த அடி பட்டு படுகாயம் அடைந்தார்.
மே 26, 2025