/ தினமலர் டிவி
/ பொது
/ மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல்லில் கனமழை Rain Madurai traffic jam madurai city Theni virudhuna
மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல்லில் கனமழை Rain Madurai traffic jam madurai city Theni virudhuna
மதுரையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 2 நாளாக விட்டிருந்த மழை இன்று மீண்டும் வெளுத்து வாங்கியது. பிற்பகல் 2 மணிக்கு துவங்கி, 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் திணறிப்போனார்கள். மழைநீரில் வண்டிகளை தள்ளிச் செல்வதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
அக் 25, 2024