நாங்க ஓசி டிக்கெட்டுன்னு உனக்கு தெரியுமா? தூய்மை பணியாளர்கள் ஆவேசம் | MagalirVidiyalPayanam
கோவை, வெள்ளக்கிணரில் இருந்து துடியலூர் நோக்கி 111 நம்பர் டவுன் பஸ் சென்றது. அங்கு தூய்மை பணியாளர் பெண்கள் பஸ்சில் ஏறிய போது, உங்களுக்கு ஓசி பஸ் பின்னால வருது, அதுல ஏறுங்க என டிரைவர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணியாளர்கள் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்க காசு கொடுத்து டிக்கெட் எடுக்கிறோம். எங்களை பார்த்து ஏன் அப்படி சொன்னீங்க என கேட்டனர். டிரைவருக்கு ஆதரவாக பேசிய கண்டக்டரையும் வெளுத்து வாங்கினர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களின் பஸ் பயணத்தை ஓசி பஸ் என்று சொல்லி சர்ச்சையானது. இப்போது கோவையில் அரசு பஸ் டிரைவர் தூய்மை பணியாளர்களை பார்த்து இப்படி சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.