/ தினமலர் டிவி
/ பொது
/ நீராவி குளியல் அறையில் உயிரற்று கிடந்த ஜிம் ஓனர் Mahadir Mohammed | Jim Owner Dead | Salempm
நீராவி குளியல் அறையில் உயிரற்று கிடந்த ஜிம் ஓனர் Mahadir Mohammed | Jim Owner Dead | Salempm
சேலம், கோட்டை வெங்கடசாமி தெருவை சேர்ந்தவர் சேட்டு என்ற மஹாதிர் முஹமத். வயது 36. தாதுபாய்குட்டையில் டுவீலர் உதிரிபாக கடை நடத்தி வந்தார். அத்துடன் குகை ஆற்றோர வடக்கு தெருவில் ஜிம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஜிம்மில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதிகபட்சமாக 200 கிலோ வரை எடை தூக்குவார் என கூறப்படுகிறது. நேற்று முன் தினம் மாலை வழக்கம்போல் உடற்பயிற்சி செய்ய ஜிம்முக்கு போனார். இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது தாய் செல்போனில் அழைத்தார் அவர் எடுக்கவில்லை. நேராக ஜிம்முக்கு வந்து பார்த்தார். அப்போது நீராவி குளியல் அறைக்குள் சுயநினைவின்றி மஹாதிர் விழுந்து கிடந்தார்.
நவ 19, 2024