மகாராஷ்டிரா தேர்தலில் கழற்றிவிடப்பட்ட கட்கரி maharastra election| nitin gadkari| Bjp
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் -பாஜ- -தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைப்பது கஷ்டம் என்று சொல்லப்படுகிறது. இதனால், தேர்தல் வியூகம், வேட்பாளர்கள் தேர்வு என, அனைத்தையும் தாமே கவனித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வேட்பாளர் தேர்வு செய்ய, ரகசிய சர்வே நடத்துவது பாஜவின் வழக்கம். இப்படி சர்வே மூலம் தேர்வானவர்களை எதிர்த்து, அதிருப்தியாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறை ரகசிய சர்வே வழக்கத்தை, கைவிட்டுள்ளார் அமித் ஷா. மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அமைச்சர்களில் ஒருவர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். முன்னதாக, எதிர்க்கட்சிகள், தம்மை பிரதமர் பதவியில் அமர்த்த முயற்சித்ததாக பேட்டி ஒன்றில் கட்கரி கூறியிருந்தார். மஹாராஷ்டிர முதல்வராக கட்கரி வருவார் என யூகங்கள் எழுந்தபோது பாஜ தலைமை தேவேந்திர பட்னவிஸை அப்போது முதல்வர் ஆக்கியது.