உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பார்லியில் உணர்ச்சி பொங்க பேசும் மஹுவாவின் டான்ஸ் திறமை Newlywed Mahua Moitra TMC MP former mp P

பார்லியில் உணர்ச்சி பொங்க பேசும் மஹுவாவின் டான்ஸ் திறமை Newlywed Mahua Moitra TMC MP former mp P

2019-ல் மேற்கு வங்கத்திலுள்ள கிருஷ்ணா நகர் தொகுதியிலிருந்து எம்பி ஆனார். பார்லிமென்டில் கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கி, குற்றச்சாட்டு நிரூபணமாகி, 2023ல் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு அசத்தல் வெற்றி பெற்றார். இவர், ஒடிசாவைச் சேர்ந்த பிஜு ஜனதா தள முன்னாள் எம்பி பினாகி மிஸ்ராவை திடீரென திருமணம் செய்தார்.. மே 3ம்தேதி, ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரில் திருமணம் ஆடம்பரமின்றி நடந்தது. நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர். இரு தினங்களுக்கு முன் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். பினாகி மிஸ்ரா முதலில் சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். 2 பிள்ளைகள் உள்ளபோதும், விவாகரத்து செய்து விட்டனர். மஹுவா மொய்த்ரா டென்மார்க் நாட்டை சேர்ந்த லார்ஸ் பிரார்சன் Lars Brorson ​ என்பவரை மணந்தார். பிறகு விவாகரத்து பெற்றார். பூரி தொகுதியில் 4 முறை எம்பியாக இருந்தவர் பினாகி மிஸ்ரா. மஹுவா 2019ல் முதல்முறையாக எம்பி ஆனபோது, இருவரும் பார்லிமென்டில் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. ஒருவரை ஒருவர் விரும்பினர். திருமணம் செய்ய முடிவெடுத்தனர். மஹுவா மொய்த்ராவுக்கு 50 வயதாகிறது. பினாகி மிஸ்ராவுக்கு 65 வயதாகிறது. இதனால் இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் விவாத பொருளாகியுள்ளது. இந்நிலையில், பெர்லின் நகரில் நடந்த திருமண பார்ட்டியில் மஹுவா மொய்த்ராவும், பினாகி மிஸ்ராவும் இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது. மஹுவா மொய்த்ராதான் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். An Evening in Paris என்ற இந்தி படத்தில் வரும் ராத் கே ஹம்சஃபர் என்ற பாடலுக்கு அவர்கள் இருவரும் சேர்ந்து ஆடும் டான்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ஜூன் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை