டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பு | kolkata hospital doctor crime | mamatha
பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம் போலீசாருக்கு மம்தா விதித்த கெடு! கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நைட் டூட்டிக்கு சென்ற பயிற்சி பெண் டாக்டர், 3வது மாடியிலுள்ள அரங்கில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். கொலை நடந்த இடத்தில் கிடைத்த அவரது புளூடூத் இயர் போனை வைத்து அவரை பிடித்தனர். டாக்டரை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக்கொண்டார். காவல்துறையில் தன்னார்வலராக பணியாற்றி வந்த சஞ்சய்க்கு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில்தான் டூட்டி பார்த்து வந்தார். செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பதை பழக்கமாக கொண்டவர். தம்மை ஒரு போலீஸ்காரர் போலவே வெளி காட்டி வந்துள்ளார். கொல்கத்தா போலீஸ் என பெயர் உள்ள டிசார்ட் அணிந்தும், வண்டியில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டியும் வலம் வந்துள்ளார். தாம் செய்த குற்றத்துக்காக அவர் வருந்தவில்லை; தேவைப்பட்டால் தூக்கிலிடுங்கள் என்று திமிராக போலீசாரிடமே சொல்லியிருக்கிறார். இவர் பல திருமணங்கள் செய்து பெண்களை ஏமாற்றியிருப்பது குறித்தும் விசாரணையில் தெரியவந்தது. பெண் டாக்டர் கொல்லப்பட்டதை கண்டித்து மேற்குவங்கத்தில் ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.