சொன்னால் மட்டும் போதாது கொல்கத்தா டாக்டர்கள் கறார் mamatha banarji| kolkata doctor crime
கொல்கத்தா மருத்துவமனையில் இளம் பெண் டாக்டர் பாலியல் பாலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் ஜூனியர் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதை முடிவுக்கு கொண்டு வர முதல்வர் மம்தா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு டாக்டர்களை மேற்கு வங்க அரசு அழைத்தது. நேற்று இரவு பேச்சுவார்த்தை நடந்தது. 6 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய முதல்வர் மம்தா, டாக்டர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்தார். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், துணை கமிஷனர் அபிஷேக் குப்தா ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக மம்தா அறிவித்தார். இவர்கள் லஞ்சம் பெற்றதாக பெண் டாக்டரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர்.