உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைவர்கள் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் | Manipur | Manipur Blast | Protest | BJP CM

தலைவர்கள் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் | Manipur | Manipur Blast | Protest | BJP CM

தலைவர்கள் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் | Manipur | Manipur Blast | Protest | BJP CM மணிப்பூரில் 2023 மே மாதம் மெய்டி இனத்தவருக்கும், மலைவாழ் மக்களான கூகி இனத்தவருக்கும் பயங்கர மோதல் வெடித்தது. 306 பேர் இறந்தனர். மத்திய மாநில அரசுகள் எடுத்த முயற்சியால் அமைதி திரும்பியது. இந்த சூழலில் இப்போது மீண்டும் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. 19ம் தேதி மலைப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற 14 மெய்டி இனத்தவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூவர் கொல்லப்பட்டனர். இதை கண்டித்து, மணிப்பூர் பூர்வகுடி மக்கள் குழு சார்பில் 48 மணி நேர முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 இந்த சூழலில் தலைநகர் இம்பாலில் முதல்வர் கெம்சந்த் சிங் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டி நேற்று நடந்தது. பெண் போராட்டக்காரர்கள் மைதானத்தை முற்றுகையிட்டனர். அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது, முதல்வர் விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.
 கபீசோய் பகுதியில், பாஜவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சார்தா தேவி மற்றும் மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தாசின் உருவபொம்மைகளை எரித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முழு அடைப்பையொட்டி இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டது. பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #Manipur | #ManipurBlast | #Protest | #BJPCM | #ManipurPolice | #Investigation

அக் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி