/ தினமலர் டிவி
/ பொது
/ சோதனை வேட்டையில் ஒரே நாளில் 18 பேரை தூக்கிய போலீஸ் | Mancha thread | Kites | Vyasarbadi search | 1
சோதனை வேட்டையில் ஒரே நாளில் 18 பேரை தூக்கிய போலீஸ் | Mancha thread | Kites | Vyasarbadi search | 1
சென்னையில் ஒரு நேரத்தில் வானத்தை பார்த்தாலே பறவைகள் போல் கூட்டம் கூட்டமாக பட்டங்கள் ஆக்கிரமித்திருக்கும். நாளடைவில் பட்டம் விடுவதில் ஏற்பட்ட போட்டிகளால், அது மாஞ்சா எனும் கொடிய கயிற்றை கொண்டு விளையாடும் விபரீதமாகிப்போனது. விளைவு... அப்பாவி மக்களின் உயிரையும், உடல் உறுப்புகளையும் சிதைத்தது மாஞ்சா பட்டங்கள். இதனால் 2016ல் மாஞ்சா நூலுக்கு தடை விதித்தது தமிழக அரசு. மீறி பயன்படுத்தினால் குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரித்தது. ஆனால் அந்த தடை உத்தரவும் பட்டம் போல் காற்றில் பறந்து கொண்டே இருக்கிறது.
நவ 19, 2024