20 வருடம் தண்ணி காட்டிய சலபதி சிக்கியது எப்படி? | Chalapati | Jayaram Reddy | Maoist Leader
சத்தீஸ்கர், ஒடிசா மாநிலத்தில் நடந்த என்கவுன்ட்டரில் 27 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில் cவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் ரெட்டி என்கிற சலபதியும் இறந்தார். இவர் ஒடிசா மாநில மாவோயிஸ்ட் அமைப்பின் செயலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரை உயிரோடோ அல்லது பிணமாகவோ பிடித்து கொடுத்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக ஒடிசா மாநில அரசு அறிவித்திருந்தது. இவ்வளவு பெரும் தொகை அவரது தலைக்கு விதிக்கப்படும் அளவுக்கு என்ன சம்பவம் செய்தார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. மாவோயிஸ்ட் சலபதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மத்தியம்பைபல்லி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு அண்ணன்கள். ஒருவர் ஆந்திர மாநில பட்டுநூல் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இவரது மகன் இன்னமும் மத்தியம்பைபல்லி கிராமத்தில்தான் வசித்து வருகிறார். சலபதியின் பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டனர். சலபதி பிறப்பதற்கு முன்பே அவரது பெற்றோரும் அந்த கிராமத்தை விட்டு சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர்.