உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெக்கானிக் இளைஞரை எஸ்ஐ தாக்கும் காட்சிகள் வைரல் | Mechanic attacked by police SI | 2 wheeler worksho

மெக்கானிக் இளைஞரை எஸ்ஐ தாக்கும் காட்சிகள் வைரல் | Mechanic attacked by police SI | 2 wheeler worksho

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், வயது 20. மதுரை வாடிப்பட்டியில் ராயல் என்ஃபீல்டு டூவீலர் பழுது நீக்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன் வாடிப்பட்டி போலீசில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த அண்ணாதுரை, இவரது ஒர்க்க்ஷாப்பில் தான் அப்போதில் இருந்து தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை பழுது பார்த்து வந்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை முழுமையாக கொடுக்காமல் இழுத்தடித்ததால் இதுவரை 8600 ரூபாய் பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது பாலமேடு போலீசில் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் அண்ணாதுரை சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தனது பைக்கை சீனிவாசனிடம் சர்வீசுக்கு விட்டுள்ளார்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ