உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆர்வமுடன் விருந்து தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள்! Meenakshi Thirukalyanam | Chithirai Festival | Madu

ஆர்வமுடன் விருந்து தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள்! Meenakshi Thirukalyanam | Chithirai Festival | Madu

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நாளை நடக்க உள்ளது. இதற்காக பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை சார்பில் திருக்கல்யாண விருந்து பிரம்மாண்டமான முறையில் தயாராகி வருகிறது. 7,000 கிலோ அரிசி, 12,000 கிலோ காய்கறிகள், 5,000 கிலோ மளிகை பொருட்களைக் கொண்டு திருக்கல்யாண விருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. 400க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் விருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்களாகவே முன்வந்து காய்கறிகளை வெட்டி கொடுக்கும் பணி செய்து வருகின்றனர். கற்கண்டு சாதம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், வடை, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார், தக்காளி சாதம், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது. மதுரை சேதுபதி பள்ளியில் விருந்து நடக்கிறது. நாளை காலை 7 மணி முதல் மாலை வரை விருந்து நடக்கும். சுமார் ஒன்றரை லட்சம் பேர் விருந்தில் கலந்து கொள்வர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ