மெஹுல் சோக்சியை தூக்கியது இப்படி தான் | Mehul Choksi arrest | ED | Nirav Modi | Vijay Mallaya | CB
மும்பையை சேரந்த பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல வங்கிகளில் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கினார். அந்த பணத்தை வைத்து நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் சொத்துக்களை வாங்கி குவித்தார். வாங்கிய கடனை செலுத்தவில்லை. மொத்தம் 13,850 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டார். சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் அவர் மீது வழக்கு பதிந்தனர். தான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்பதை உணர்ந்த சோக்சி 2018ல் இந்தியாயில் இருந்து தப்பி ஓடினார். ஆன்டிகுவா மற்றும் பர்டாஸ் தீவுகளுக்கு சென்ற சோக்சி சிறிது காலம் அங்கு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். அவரை கைது செய்யும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் தீவிரப்படுத்தியது. நம் நாட்டில் அவரது பெயரில் இருந்த 2,500 கோடி ரூபாய் சொத்துக்களை மத்திய அரசு முடக்கியது. இந்த நிலையில் தான் மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்ற சோக்சி, ஓராண்டாக அங்கு வசதித்து வருவதை வெளியுறவுத்துறை மோப்பம் பிடித்தது. அங்கு வைத்தே அவரை கைது செய்யும் ஆக்சனிலும் இறங்கியது. சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குகளை சுட்டிக்காட்டி சோக்சியை கைது செய்யும் படி பெல்ஜியம் அரசுக்கு இந்தியா வலியுறுத்தியது. இதையடுத்து பெல்ஜியம் கோர்ட் உத்தரவுப்படி, இம்மாதம் 12ம் தேதி மெஹுல் சோக்சி கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது அவரை நாடு கடத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சோக்சி கைது செய்யப்பட்டதையும் அவரை நாடு கடத்த நம் அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் பெல்ஜியம் அரசு உறுதி செய்தது. இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த விவரங்களையும் தெரிவிக்க முடியாது என்றும் பெல்ஜியம் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில், இப்போது சோக்சியை தட்டி தூக்கி, அவரை நாடு கடத்தும் நடவடிக்கையில் இந்தியா களம் இறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோக்சி வழக்கு விசாரணை அடுத்த வாரம் பெல்ஜியத்தில் நடக்க உள்ளது. அப்போது அவரை நாடு கடத்தும் நடவடிக்கை தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் நேரடியாக பேச்சு நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக நம் நாட்டு அதிகாரிகள் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்டதை தொடர்ந்து, சோக்சிக்கு எதிரான ஆப்ரேஷனும் வெற்றி பெறும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.