/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி அமெரிக்க விசிட்டுக்கு முன் திக் திக் melville swaminarayan temple attack | Modi America visit
மோடி அமெரிக்க விசிட்டுக்கு முன் திக் திக் melville swaminarayan temple attack | Modi America visit
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கின் மெல்வில் நகரில் சுவாமிநாராயணன் கோயில் உள்ளது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் இங்கு வழிபாடு நடத்தி வருகின்றனர். இரவில் கோயிலுக்கு வந்த சிலர் அத்துமீறி நடந்து கொண்டனர். கோயில் சுவற்றில் கருப்பு நிற ஸ்பிரே பெயிண்ட் அடித்தனர். அதில், மோடி ஒரு பயங்கரவாதி என்றும் இந்தியா ஒழிக என்றும் ஆசாமிகள் எழுதி இருந்தனர். கோயில் முன்பு போகும் ரோட்டில் மோடியை ஆபாசமாகவும் வசைபாடி இருந்தனர்.
செப் 17, 2024