/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி பிறந்தநாளுக்கு சென்னை மாணவியின் வித்தியாச வாழ்த்து! Millet painting for Modi's birthday | Chen
மோடி பிறந்தநாளுக்கு சென்னை மாணவியின் வித்தியாச வாழ்த்து! Millet painting for Modi's birthday | Chen
சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த பிரதாப் செல்வம் - சாங்கிராணியின் மகள் பிரிஸ்லி ஷேகினா. வயது 13. 8ம் வகுப்பு படிக்கிறார். செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சிறு தானியங்களை பயன்படுத்தி பிரம்மாண்ட மோடியின் ஓவியத்தை வரைந்து பிரிஸ்லி ஷேகினா சாதனை படைத்துள்ளார். 600 சதுர அடி பரப்பில், 800 கிலோ சிறு தானியங்களை பயன்படுத்தி பிரதமர் மோடியின் உருவப்படத்தை வரைந்துள்ளார். இதில் பல வகை சிறுதானியங்களை அவர் பயன்படுத்தி உள்ளார். 15ம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் செலவழித்து இந்த ஓவியத்தை வரைந்து முடித்தார்.
செப் 16, 2024