துரைமுருகன் கிளப்பிய அதிர்ச்சி: என்ன நடந்தது? | Minister Duraimurugan | DMK
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிராமங்களை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுடன் கிளம்பினார். வீட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் அவரே நடந்து வந்து காரில் ஏறினார். ஆனால் பொன்னை பகுதிக்கு சென்ற துரைமுருகன் காரில் இருந்து இறங்கவில்லை. எனக்கு காலில் சதை பிரண்டு இருக்கு. கால் கட்டு போட்டு இருக்காங்க. அதனால் இறங்கி வந்து பேச முடியாது. காரில் இருந்தே பேசுறேன் என்றார். அங்கே திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் மக்கள் கூடி இருந்தனர். கூட்டம் ஒருபுறம் அமர்ந்திருக்க துரைமுருகன் காரில் இருந்தவாறே பேசினார்.
ஜூலை 20, 2024