தங்க, வைர கிரீடத்துடன் ₹1.15 கோடி பரிசு தொகை | Miss world 2025 | Suchata chuangisri | Thailand
72வது மிஸ் வேர்ல்டு உலக அழகி போட்டி தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மே 10ல் தொடங்கியது. கடந்த ஆண்டும் உலக அழகி போட்டி இந்தியாவிலேயே நடந்தது. மும்பையில் நடந்தபோட்டியின் இறுதி சுற்றில், செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா வெற்றி பெற்று, 71வது மிஸ் வேர்ல்டு பட்டம் பெற்றார். அவர் நடப்பு போட்டியில் வெற்றி பெறும் புதிய மிஸ் வேர்ல்டு போட்டியாளருக்கு கிரீடம் அணிவிப்பார். இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்பதற்காக 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இந்தியா சார்பில், மிஸ் இந்தியா பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். ஆனால் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை அவர் தவறவிட்டார். இந்நிலையில் இறுதி சுற்று இன்று நடந்தது. அழகிகளுக்கு இடையே விளையாட்டு, தனித்திறமை, நடனப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தாய்லாந்தின் ஓபல் சுச்சதா சுவாங் ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்வானார். எத்தியோப்பியாவை சேர்ந்த ஹசேட் டெரேஜே அட்மாசு 2வது இடத்தை பிடித்தார். போலந்து அழகி 3வது இடத்திலும், மார்டினிக் அழகி 4ம் இடமும் பிடித்தனர்.